Posts

Showing posts from March, 2025

விகே. ராமசாமி ஓட விட்ட காமராஜர்! காரணம் கேட்டா ஆச்சரியப்படுவீங்க!

 கடமை, நேர்மை, எளிமை – இவற்றின் உன்னத உதாரணமாக வாழ்ந்தவர் காமராஜர். தமிழகத்தின் முதல்வராக இருந்தபோதும் அவரிடம் சொற்பமான பணமே இருந்தது. அரசியலில் உள்ளவர்கள் பெரும்பாலும் அதிகாரத்தால் செல்வந்தர்களாக மாறும் நிலையில், காமராஜர் தனது நேர்மையான வாழ்க்கை முறையால் பலருக்கும் முன்மாதிரியாக இருந்தார். தமிழகத்தில் புதிய கட்சி துவங்குபவர்கள் பலரும் “காமராஜர் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவோம்” என்று சொல்லும் அளவுக்கு, அவர் தொட்டுத் தந்த நிர்வாகம் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. நண்பர்கள் என்றாலும் நேர்மையில் தயக்கம் இல்லை நடிகர் விகே ராமசாமியும் காமராஜரும் சிறுவயது முதல் நண்பர்கள். இருவரும் விருதுநகரை சேர்ந்தவர்கள் என்பதால் நல்ல பழக்கம் இருந்தது. ஆனால், நண்பர் முதலமைச்சராக இருந்தாலும், எந்த உதவிக்கும் நேரில் சென்று பரிந்துரை செய்ய மாட்டார் விகே. ராமசாமி. ஒருமுறை, விருதுநகரில் உள்ள ஒரு அரசு பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதைக் கவனத்தில் கொண்டு, அந்நகரத்திலிருந்து ஐந்து பேர் சென்னைக்கு வந்து, விகே. ராமசாமியிடம், "காமராஜர் உங்கள் நண்பர்தானே? அவரிடம் நேரில் சென்று சொல்லுங்கள், பள...